அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறிய நீதிக்கதை
அனைவரையும் சிந்திக்க வைத்திடும் சிறப்பான சிறுகதை இதோ👇👇
சிந்திக்க வைக்கும் நீதிக்கதை
கவியரசி கதை, கவிதை, நாவல் போன்றவற்றை படைப்பதில் கைத்தேர்ந்தவள். அவளுடைய படைப்புத் திறனும் எழுத்து நடையும் அவளுக்கு பத்திரிகை ஒன்றில் எழுத்தர் பணியை பரிசளித்தது. தன் திறமைக்கு கிடைத்த பணியை ஆத்மதிருப்தியுடன் செய்து வந்த கவியரசி பணிக்கு எப்போதும் காலந்தவறாது வருகை புரிவதிலும் கெட்டிக்காரியாக இருந்தாள்.
அன்றைய தினம் பத்திரிக்கை அலுவலகத்தில் பணியாளர்களை சிறப்பிக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வருடம் முழுவதும் காலந்தவறாது பணிக்கு சரியான நேரத்திற்கு வந்ததற்காக சிறப்பு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது கவியரசிக்கு. அன்று கவியரசி மனநிறைவோடு வீடு திரும்பினாள்.
ஓருவாரம் கழிந்த நிலையில் ஒருநாள், தினமும் காலை ஆறு மணிக்கு எழும் அவள் அரைமணி நேரம் தாமதமாக எழுந்துவிட்டாள். அதனால் பதட்டமடைந்து, அனைத்து வேலைகளையும் மிகமிக வேகமாக முடித்துவிட்டு பணிக்குச் செல்வதற்காக ஸ்கூட்டரை நோக்கி ஓடினாள்.
அவள் வீடு நான்காவது மாடியில் இருந்தது. நான்காம் மாடியிலிருந்து கீழே நிற்கும் ஸ்கூட்டரை நோக்கி ஓடியவள் அதிர்ந்து போனாள் ஸ்கூட்டரின் சாவி வீட்டில் இருப்பதை எண்ணி.
சாவியை எடுக்க வீட்டை நோக்கி விரைந்தவள், பூட்டு தரையில் கிடப்பதை பார்த்து பூட்டை பதட்டத்தில் சரியாக பூட்டவில்லை என்பதை உணர்ந்தாள். பிறகு சாவியை எடுத்துவிட்டு ஸ்கூட்டரை நோக்கித் திரும்பினாள்.
ஸ்கூட்டரில் வேலைக்கு பறந்தவள், அலுவலகத்திற்கு கால்மணி நேரம் தாமதமாக வந்ததை வெகுவிரைவிலே உணர்ந்தாள். மேலாளரிடம் பதட்டத்தால் ஏற்பட்ட விளைவுக்கு மன்னிப்பு கோரினாள் மற்றும் இதுபோன்று இனிமேல் நடக்காது என்றும் உறுதி அளித்தாள்.
தன் அனுபவத்தின் மூலம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பிய அவள், தன் அனுபவத்தை சுவைமிகு சிறுகதையாய் வெளியிட்டாள். மனம் கவரும் எழுத்து நடையோடு அவள் எழுதிய கதையின் முடிவில், "பதறிய காரியம் சிதறிப் போகும்." என குறிப்பிட்டிருந்தாள்.
(கதையை எழுதியவர் சுபஶ்ரீ)
மேலும் இதுபோன்ற கதைகளுக்கு, இங்கு தொடவும்...
கதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவு செய்திடுங்கள். கதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள்... 😊சிறுகதையை சிறிதுநேரம் செலவிட்டு முழுமையாய் வாசித்தமைக்கு நன்றி🙏🙏.
Nice ☺️
ReplyDelete