அனைவரையும் சிந்திக்க வைத்திடும் சிறுகதை நேரம்
சிந்திக்க வைக்கும் சிறுகதை நேரம்
தமிழரசி மென்மையான குணம் கொண்டவள். அவள் தன் நண்பர்கள் மீது அக்கறையுடன் இருப்பவள். அவள் தோழி கமலா, அன்று பள்ளிக்கு வந்ததிலிருந்தே மிகவும் சோர்வாக இருந்தாள். தன் தோழியை கவனித்த தமிழரசிக்கு ஏதோ தவறாகத் தோன்றியது.
கமலாவிடம் சோர்விற்கான காரணத்தை வினவினாள் தமிழரசி. தோழியின் கேள்விக்கு, "விரதம் மேற்கொள்வதால், முகம் வாடி இருக்கக்கூடும்" எனக் கூறி சமாளித்தாள் கமலா. இந்த நிலை ஒரு வாரமாக தொடர்ந்த வண்ணம் இருந்தது. கமலா மிகுந்த சோர்வில் ஆழ்ந்திருக்க, தமிழரசி அவளை சாப்பிடுமாறு வற்புறுத்துவாள். ஆனால் விரதம் எனக்கூறி பிடிவாதமாய் உண்ண மறுத்துவிடுவாள் கமலா. அடுத்த வாரம் முழுவதும் யாரிடமும் காரணம் சொல்லாமல் கமலா ஒருவாரமாக பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்தாள்.
ஒருவாரமாக கமலா பள்ளிக்கு வராததால் அதிர்ந்து போனாள் தமிழரசி. எனவே, கமலாவின் வீட்டிற்கு போன் செய்தாள். போன் செய்த அவளுக்கு பலப்பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது.
கமலா தனக்கு கைப்பேசி வாங்கித்தரும்படி பெற்றோரிடம் பிடிவாதமாய் இருந்ததாக தெரிய வந்தது. மேலும், போதிய பணம் இல்லாததால் பிறகு வாங்கலாம் என அறிவுரைத்த பெற்றோரை எதிர்த்து, பிடிவாதமாய் பட்டினி கிடந்து உடம்பை வருத்தியதும் தெரியவந்தது.
கமலாவின் பிடிவாத உண்ணாவிரதப் போராட்டம் அவளுக்கு தீவிர உடல்நல பாதிப்பை பரிசளித்தது. அதனால் ஒருவாரத் தீவிர சிகிச்சைக்கு பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாள் கமலா. மேலும், ஒருவார ஓய்விற்குப் பின்பே, அவளால் பள்ளிக்கு திரும்ப முடிந்தது.
பள்ளிக்கு திரும்பிய தன் தோழியிடம் தமிழரசி, "பிடிவாதம் எவ்வளவு மோசமானது என அறிந்து கொண்டாய் போலும்!" எனக் கூறி புன்னகைத்தாள். மேலும், இனி கோபத்தில் பிடிவாத முடிவுகளை எடுப்பதை தவிர்க்கும்படி தோழிக்கு அன்போடு அறிவுரைத்தாள்.
கதையைப் பற்றிய தங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்திடுங்கள். கதை பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடனும் மறக்காமல் ஷேர் செய்யுங்கள்😊.
மேலும், சிந்திக்க வைக்கும் சிறுகதைகளை வாசித்து மகிழ, கீழே கொடுக்கப்பட்டுள்ள "கதை நேரம்" என்ற லேபிலை பயன்படுத்துங்கள்
��
ReplyDeleteSuper 👌 👌
ReplyDelete