அனைவரையும் சிந்திக்க வைக்கும் கதை நேரம்
மாற்றம் நம் கையில்...
அன்று ஞாயிற்றுக்கிழமை, பள்ளி விடுமுறை எழிலரசிக்கு. வீட்டுப்பாடம் முடித்துவிட்ட எழில், பொழுதைக் கழிப்பதற்காக செய்வதறியாமல் தெருவைப் பார்த்தபடி வீட்டு வாயிலருகில் அமர்ந்திருந்தாள்.
எழிலின் வீட்டிற்கு எதிரில் மளிகை கடை இருந்ததால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை பார்க்க வேண்டி இருந்தது. கடைக்கு மிட்டாய் வாங்க வரும் குட்டிக் குழந்தைகள் செய்யும் சுட்டிக் குறும்புகளை பார்த்து ரசித்த வண்ணம் அவள் நேரம் கழித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, அந்த கடைக்கு பேசியபடியே இரு பெண்கள் சென்று கொண்டிருந்தனர். சாலையில் ஆங்காங்கே குப்பையாய் கிடப்பதை பற்றி கவலையை தெரிவித்துக் கொண்டிருந்தனர். சாலையை சுத்தம் செய்ய அரசு பொறுப்பேற்காமல் அலட்சியம் காட்டுவதாய் குற்றம் சாட்டியபடி நடந்தவர்கள் கடையை அடைந்தனர். சமூகத்தை மாற்றத் துடிக்கும் அவர்களுடைய பேச்சு எழிலுக்கு மகிழ்வைத் தந்தது. அவர்கள் மீது எழிலுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.
கடையில் பொருட்கள் வாங்கியவர்கள், தங்கள் தாகம் தணிப்பதற்காக வாங்கிய தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை பருகிவிட்டு காலியான பாட்டிலை கசக்கி கீழே வீசியபடி மீண்டும் பேசியவாறே நடக்கத் தொடர்ந்தனர். இந்த நிகழ்வு எழிலின் மனதில் அவர்கள் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கையை சுக்குநூறாய் உடைத்தது.
Super 👌👌👌
ReplyDeleteSuper👌👌👌👌
ReplyDeleteSuper 👌👌👌👌👌👌
ReplyDelete