பெற்றோரின் அருமையை விளக்கும் சிறுகதை நேரம்
சிறப்பான கருத்தை விளக்கும் சிறுகதை நேரம்👇👇
பாலனுக்கும் நிலாவிற்கும் திருமணமாகி பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டது. இத்தம்பதியினரின் ஒரே மகளின் பெயர் மாலா. பாலன் அரசுக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி நிலா, ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இருவரின் வருமானமும் குடும்பச்செலவுகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருந்தது.
மாலா பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாள். பெற்றோர் இருவரும் பணிபுரிவதால், மாலாவின் மனம் பாதிக்கக்கூடாது என்பதற்காக, அத்தம்பதியினர், தங்கள் மகளுடன் நேரம் கழிக்கவும் தவறியது இல்லை. இருவரும் சம்பாதிப்பதால் பணத்தேவையும் குடும்பத்திற்கு இல்லை. எனவே, அத்தம்பதியினர் திருப்தியான வாழ்வு வாழ்ந்து வந்தனர்.
மாலாவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தாலும், அவள் தன்னுடன் பயில்பவர்களை தன்னுடன் ஒப்பிட்டு கவலையாக இருப்பாள். அவள் இவ்வாறு எப்போதும் திருப்தியற்ற மனதுடன் இருப்பதை எண்ணி, அவளது பெற்றோர் மிகவும் வருத்தம் அடைந்தனர்.
மாலாவின் பிறந்தநாளுக்கு ஒருவாரம் மட்டுமே இருந்தது. எனவே, மூவரும் பிறந்தநாள் உடை எடுக்க கடைக்குச் சென்றனர். மாலாவின் மன விரும்பத்திற்கு ஏற்ப மூன்று புத்தாடைகளை வாங்கிவிட்டு வீடு திரும்பினர்.
இரண்டு நாள் கழித்து, உடன்பயிலும் மாணவியின் பிறந்தநாள் ஆடையை தன்னுடைய புத்தாடையுடன் ஒப்பிட்டு கவலை அடைந்தாள் மாலா. இந்நிகழ்வு, பெற்றோரின் மனதில் மீண்டும் கவலையை உருவாக்கியது. எனவே, பிறந்தநாளன்று அவளுக்கு சிறிய பாடத்தை கற்பிக்க முடிவு செய்தனர் அவளது பெற்றோர்.
மாலாவின் பிறந்தநாள் வந்தது. அவளது பெற்றோர் அவளை முக்கியமான இடத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும் எனக்கூறி, ஒரு ஆனாதைக் குழந்தைகள் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள குழந்தைகளைக் கண்ட அவள், அக்குழந்தைகளுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்க மிகவும் தயங்கினாள். மேலும், பெற்றோரின் அருமையை முதன்முறையாய் உணர்ந்தாள். வீடு திரும்பிய அவளுக்கு, அவளது திருப்தியற்ற குணத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது.
அன்று மாலை, பிறந்தநாள் விழாவை வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர் அவளது பெற்றோர். விழாவிற்கு அவளுடன் பயில்பவர்களும் வருகை புரிந்தனர். அவர்களிடம் மனமகிழ்வோடு "இதுவே எனது சிறந்த பிறந்தநாள்" என கூறினாள் மாலா. மேலும், அவளுடைய உடையை தங்களது உடைகளுடன் ஒப்பிட்டுக் கொண்டிருந்த தன் தோழிகளிடம், "அடுத்தவருடன் நம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம்" என அன்பாக கூறினாள்.
நீதி: இருப்பதை வைத்து எப்போதும் மன நிறைவு கொள்ள வேண்டும்.
(கதையை இயற்றியவர் சுபஶ்ரீ)
மேலும் கதைகளை வாசிக்க "கதை நேரம்" என்ற லேபிலை பயன்படுத்துங்கள். கதையை பற்றிக் கமண்ட் செய்வதோடு தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
Nice👍
ReplyDeleteSuper👍👌
ReplyDeleteSEMA 😇
ReplyDeleteNice
ReplyDeleteNice
ReplyDelete