சிறந்த கருத்துக்கள் கொண்ட சிறந்த சிறுகதை நேரம்
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய "அறக்கோவில்" என்ற அற்புதமான சிறுகதை 👇👇 அறக்கோவில் ஒரு நகரத்தில் இறைப்பற்று மற்றும் இரக்க குணம் அதிகம் கொண்ட செல்வந்தர் ஒருவர் வசித்து வந்தார். கோவில் கோவிலாக இறைவனை நாடிச் சென்று, பூசைகளில் பங்கேற்பதையே தன் பிரதானக் கடமையாக கருதினார் அவர். செல்வந்தர் என்பதால், கோவிலுக்கு இலட்சக் கணக்கில் நிதியுதவி செய்வதிலும் குறை வைக்காது செயல்பட்டு வந்தார். நாளடைவில், மாளிகை போல் பிரம்மாண்டக் காட்சி தரும் தான் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியில் இறைவனுக்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்தார். அவர் இறைத்தொண்டை இன்றியமையாத தொண்டாக கருதினார். எனவே, ஆலயம் எழுப்ப செய்ய வேண்டிய பணிகளைத் தாமதிக்காது தொடங்க முடிவு செய்தார். 'ஆலயம் எழுப்ப எவ்வளவு பணம் செலவாகும்?' என தீவிரச் சிந்தையில் ஆழ்ந்து கிடந்தவரை வாயில் மணியோசை வெகுவாக திசை திருப்பியது. 'இந்நேரம் யாருடைய தொந்தரவு?' என மனம் நொந்து கொண்டு, வாயிலில் நிற்பவரை உள்ளே அழைத்து வருமாறு தன் வேலையாளிடம் கட்டளையிட்டார். எஜமானரின் கட்டளைக்கு அடிபணிந்து, வாயிலில் நின்றவரை வீட்டிற்குள் அழைத்து வந்தார் வேலையாள். தன்னைத...