அனைவருக்கும் ஊக்கம் தந்திடும் சிந்தனை துளிகள்
சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டும் தலைசிறந்த சிந்தனை துளிகள்👇👇 (1) " தன் மாணாக்கரை மதிப்புமிக்க மனிதர்களாக உருவாக்க தன்னலமின்றி உழைப்பவரே ஆசிரியர். எனவே, அக்கறையோடு கண்டிக்கும் ஆசிரியரை அற்பமாய் நினைக்காதீர்." (2) "எத்தனை முறை தோல்வியால் துவண்டு விழுந்தாலும், 'மீண்டும் மீண்டு வருவேன்' என்ற நம்பிக்கை இருப்பின் வெற்றி நிச்சயம். (3) "உன் எதிரியாக இருந்தாலும் அவன் நற்காரியங்களில் ஈடுபட்டால் ஆதரிக்க தயங்காதே; உன் நண்பனாய் இருப்பினும் அவன் கெடுதலில் ஈடுபட்டால் இடித்துரைக்க தயங்காதே." (4) "எதுவுமே முடியாது என்று நினைத்தால் தோல்வி நிச்சயம்; எதுவும் முடியும் என்று நினைத்தால் வெற்றி நிச்சயம்". (5) " தவறான பாதையில் தவறியும் உன் நண்பன் செல்லாமலிருக்க உன் நண்பனை இடித்துரைப்பதும் தவறன்று." (6) "தன்னுள் இருக்கும் கோபத்தையும் கொடூர புத்தியையும் எவன் அடக்கி ஆள்கிறானோ அவனே மற்றவர்களை ஆளும் தகுதி உடையவனாவான்." (7) "பிறரை நம்பினால் ஏமாளி ஆவாய்; உன்னை நம்பினால் வெற்றி காண்பாய்." (8) "எதையும் மிகுந்த கவனத்துடன் தேர...