வெற்றிபெற அனைவரும் நிச்சயம் பின்பற்ற வேண்டியவை
வாழ்வில் வெற்றியை அடைய அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டியவை:
(1) " கைரேகையை பார்த்து உங்கள் வாழ்வை முடிவு செய்துவிடாதீர்கள். நினைவில் கொள்ளுங்கள்- கை இல்லாதவருக்கும் வாழ்க்கை இருக்கிறது."
🤔🤔🤔
(2) " வாழ்வு இருளாக இருப்பதை எண்ணி ஒருபோதும் மனம் தளராதீர்கள். ஏனென்றால் சிறந்த கனவுகளும் இருளில் தான் தோன்றும்."
(3) " தவறு செய்யாதவன் மனிதன் இல்லை; செய்த தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை!! "
(4) " தன்னம்பிக்கை💪 முட்டுக்கட்டைகளையும் வெற்றிப் படிக்கட்டுகளாய் மாற்றும் வலிமை உடையது."
(5) " நம்மால் முடிந்த வரை இல்லாதவர்க்கு கொடுத்து உதவுதல், இறைவனுக்கு தொண்டு செய்வதைக் காட்டிலும் மிகவும் சிறந்ததாகும்."
இறை தொண்டு செய்வோர் முதலில் இல்லாதவர்க்கு தொண்டு செய்திடுங்கள்👍👍.
(6) " ஒருவரை சூழ்ச்சி செய்து வென்றீர்களானால் நினைவில் கொள்ளுங்கள் நீங்களும் ஒருநாள் சூழ்ச்சியால் வீழ்த்தப்படுவீர்கள் என்று."
சூழ்ச்சி நிச்சயம் வீழ்த்தப்படும், ஆனால் முயற்சி என்றென்றும் உயர்த்தப்படும்💪💪.
(7) " நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்; நம்பிக்கை இழந்தால் வீழ்ச்சி நிச்சயம்."
நம்பிக்கை + முயற்சி = வெற்றி!!👍
(8) "முடியாது என எந்த செயலையும் ஒதுக்கி விடாதீர்கள். முயற்சி என்றென்றும் உயர்ச்சியையே பரிசளித்திடும்."
முயன்றால் முடியாதது ஏதுமில்லை அல்லவா???
(9) " உளியின் அடியை வலிமையாய் தாங்கினால் தான் கல் அழகிய சிற்பமாகும். அதுபோல, எவன் அவச்சொற்களை பொருட்படுத்தாது நற்செயல்களில் ஈடுபடுகிறானோ அவனே வெற்றி அடைவான். "
(10) " வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணம் செய்வோர் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்வது மிகவும் அவசியம்..."
நினைவில் கொள்ளுங்கள் ' முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.'
மேலும் இது போன்ற சிந்தனை துளிகளுக்கு இங்கே தொடவும்...
சிந்தனை துளிகளில், தங்கள் மனம் கவர்ந்த சிறந்த சிந்தனை துளியை மறக்காமல் கமண்ட் செய்திடுங்கள்.
சிந்தனை துளிகள் தங்களுக்கு பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடன் பகிர தவறாதீர்கள்.....😊😊
முழுமையாய் வாசித்தமைக்கு நன்றி🙏🙏.
👌🏻
ReplyDelete