Posts

Showing posts with the label சிந்தனை துளிகள்

உன்னதமான வாழ்க்கை பெற பின்பற்ற வேண்டியவை

உன்னதமான வாழ்வுக்கு வழிகாட்டும் மிகச்சிறந்த சிந்தனை துளிகளை வாசித்து மகிழுங்கள்👇👇  (1) "உங்களை எவரும் மதிக்கவில்லை என நீங்கள் கவலைப்படுவதற்கு முன், நீங்கள் அனைவருக்கும் எவ்வளவு மரியாதை கொடுத்தீர்கள் என சிந்தித்து பாருங்கள். காரணம் புரியும்." (2) "மரியாதையானது, மனதில் இருந்து வர வேண்டும். நிர்பந்தத்தின் பேரில் செலுத்தப்படும் மரியாதை, என்றாவது ஒருநாள் அவமானத்தை நிச்சயம் தரும்." (3) "உங்களது கடமையை நிறைவேற்றாமல், அடுத்தவர் மீது குறை கூறாதீர்கள். ஏனெனில், கடமை உங்களுடையதே. எனவே, உங்கள் அலட்சியத்தை மறைக்க  அடுத்தவர் மீது பழி போடாதீர்கள்." (4) "மனதில் மார்க்கம் இருப்பவரால், அரிய காரியத்தையும் கைவசப்படுத்த முடியும். ஆனால், மனதில் மார்க்கம் இல்லாதவர், கடமைகளில் இருந்து தப்பிக்கவே எப்போதும் காரணம் கண்டுபிடிப்பர்." (5) "உங்கள் தவறுகளை நீங்கள் உணரவில்லை என்றால், அடுத்தவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் தகுதி உங்களுக்கு கிடையாது." (6) "உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும் இடத்தில் பேசுங்கள். மதிப்பு கொடுக்கப்படாத இடத்தில், மௌனம் சாதிப்பதே சாலச் ...

அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்

எல்லோரும் வாசிக்க வேண்டிய எளிமையான சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்👇👇    (1) " அடுத்தவர்க்கு சூழ்ச்சி செய்து வெற்றியை அனுபவிப்பதை விட, நேர்மையான மனதுடன் தோல்வியை ஏற்பதே சிறந்த செயல்." (2) " உங்களை ஏமாற்றியவர்களை நீங்களும் ஏமாற்ற வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், அவரிடம் மீண்டும் ஏமாறாமல் இருக்கும் மன தெளிவை நீங்கள் ஏற்படுத்துதல் அவசியமாகும். (3) " உங்களுக்கு சரியாக தோன்றுவது பிறருக்கு தவறாகவும் தோன்றலாம். நினைவில் கொள்ளுங்கள்- உங்கள் எதிரில் நிற்பவர்க்கு உங்களது வலப்பக்கம் இடப்பக்கமாகத் தான் தெரியும்." (4) " யாரோ ஒருவரால் செய்ய முடிந்த செயல், மனிதர்கள் அனைவராலும் செய்ய முடிந்த செயலாகும். ஆனால், அதை நினைவேற்ற முழுமனதோடு முயற்சி செய்ய வேண்டும்." (5) " உங்கள் மீது நம்பிக்கை இல்லாத போது, இறைவன் மீது நம்பிக்கை வைத்தும் பலனில்லை." (6) " முடிந்தவரை சிரித்து வாழுங்கள். ஏனெனில், வாழ்வு மிகவும் சிறியது." (7) " உங்கள் மனதில் நம்பிக்கை இருக்கும் வரை, எவராலும் உங்களை முழுமையாய் தோற்கடிக்க முடியாது." (8) " கடந்தகால வாழ்வை பற...

வாழ்வின் எதார்த்தத்தை விளக்கும் சிந்தனை துளிகள்

வாழ்வை சிறப்பாக வழிநடத்த உதவும் எதார்த்தமான சிந்தனை துளிகள்👇👇 (1) " கடமையை செய்யாமல் தப்பிக்க, அடுத்தவர் மீது பழி சுமத்தாதீர். உங்கள் காரணங்களை இறைவன் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்." (2) " தவறான பாதை என தெரிந்தால், உலகமே அந்த பாதையில் பயணித்தாலும் நீங்கள் பயணிக்காதீர். (3) " வாழ்வில் வெற்றி பெற, இறைவன் தரும் அனைத்து பரீட்சையிலும் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை. அவர் வைக்கும் அனைத்து தேர்வுகளிலும் மன உறுதியோடு கலந்து கொண்டாலே போதும்." (4) "  தீயவரிடம் இருந்து என்றென்றும் விலகி இருங்கள். உ ங்களுக்கு தீங்கு விளைவித்த நபருக்கு நீங்களும் தீங்கு விளைவிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை." (5) " சொற்களை ஆராய்ந்து பயன்படுத்துங்கள். ஆராயாமல் பேசும் கடுமையான சொற்கள் ஆபத்தை அள்ளித்தரும் அபாயம் வாய்ந்தது." (6) " வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய, அன்றைய பணியை அன்றே நிறைவேற்றினாலே போதும்." (7) " அடுத்தவருடைய பலவீனங்களை அறிய துடிக்காதீர்கள். அதுபோல, இந்த உலகமும் உங்களது பலவீனங்களை அறிய முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங...

அவசியம் வாசிக்க வேண்டிய அற்புதமான சிந்தனைகள்

அற்புதமான வாழ்வுக்கு வழிவகுக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான சிந்தனை துளிகள்👇👇 (1) "உங்களுக்கு பிடித்தவற்றையே எப்போதும் செய்யுங்கள். ஏனெனில், இந்த உலகில் உள்ள அனைவரையும் ஒருபோதும் உங்களால் திருப்திப்படுத்த இயலாது." (2) "தோல்வியில் இருந்து தப்பிக்க வாழ்வை வெறுப்பது ஒருபோதும் தீர்வாகாது. மன உறுதியோடு தோல்வியை எதிர்த்து போராடுவது ஒன்றே பலனளிக்கும்." (3) "இறைவன் உங்களது அனைத்து முயற்சிக்கும் தோல்வியையே பரிசளித்தாலும் மனம் கலங்காதீர்கள். நினைவில் கொள்ளுங்கள்- இறைவன் நீங்கள் முயற்சி செய்வதை விட உயர்வான செயலுக்கு உங்களை ஏற்கெனவே தேர்வு செய்திருப்பார்." (4) "ஒருவரிடம் கடுஞ்சொல் கூறுவதற்கு முன், உங்களிடம் யாரேனும் கடுஞ்சொல் கூறினால் உங்கள் மனம் எவ்வாறு வேதனைப்படும் என்பதை எண்ணிப் பாருங்கள்." (5) "ஒருவர் உங்களுக்கு தீங்கு செய்ததற்காக நீங்களும் தீங்கு செய்து பழிவாங்குவதால் மனதிற்கு நிம்மதி கிடைக்காது." (6) "ஒருவரிடம் மனதை பார்த்து பழகிடுங்கள்; உருவத்தை பார்த்து அல்ல. ஏனெனில், மின்னுவதால் கண்ணாடியும் பொன்னும் ஒன்றாக முடியாது." (7...

வாழ்வில் வளர்ச்சி பெற தவறாது இதை வாசியுங்கள்

வாழ்வில் வளர்ச்சி அடைந்து மகிழ்ச்சியோடு வாழ விரும்பும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வரிகள்👇👇 (1) "உன்னை எவரும் தாழ்த்தி பேசுவதால் நீ தாழ்ந்து விட மாட்டாய். நினைவில் கொள்- தாழ்ந்தவர்கள் மனம் எப்போதும் தாழ்வாகத்தான் சிந்திக்கும்."   (2) "உனக்கு கூறப்படும் அறிவுரைகள் அனைத்தையும் கவனித்துக்கொள். ஆனால், உன் மனம் சொல்லும் வழியையே பின்பற்று."   (3) " ஒரு தவறை அனைவரும் செய்வதால் நாமும் செய்ய வேண்டும் என்பது அவசியமன்று. உங்கள் மனதிற்கு தவறு என தெரிந்தால், எவருக்காகவும் அத்தவறை செய்யாதீர்."   (4) "நீங்கள் எத்தனை முறை தோல்வியை தழுவினாலும் முயற்சி செய்வதை நிறுத்திவிடாதீர். முடிவற்ற முயற்சிக்கு இறைவன் அருள் நிறைந்த வெற்றியை பரிசளிப்பார்."   (5) "உங்கள் மீது நம்பிக்கை இல்லாத போது வேறு எவர் மீது நம்பிக்கை வைத்தாலும் அந்த நம்பிக்கை வீணாவது உறுதியே."   (6) "மனதில் உறுதியோடு இலக்கை நோக்கி முதற்முயற்சி செய்தால், உங்கள்  மன உறுதியே  உங்கள் இலக்கை அடைய உதவி செய்யும்.   (7) "இன்றைய முயற்சி தோல்வியை அடைந்தால் நாளைய முயற்சி வெற்றியை அடையும். ஆன...

மேன்மையான வாழ்வுக்கு சிறப்பான சிந்தனை துளிகள்

Image
  மேன்மையான வாழ்வுக்கு சிறப்பான சிந்தனை துளிகளுடன் நாளை துவங்கிடுங்கள்👇👇 (1) "வெற்றியை அறுவடை  செய்ய துடிக்கும் மனதிற்கு, இலக்கை விதைப்பதோடு  தன்னம்பிக்கையயும் உரமிடுவது மிகவும் அவசியமாகும்." (2) "முழுமனதின் ஈடுபாட்டுடன் செயலைச் செய்யும் பொழுது, தடைகள் பல வந்தாலும் அதை தகர்த்த மூளையை மனம் ஊக்குவிக்கும்." (3) "உங்களைச் சுற்றி இருக்கும் நபர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதற்கு நீங்கள் முதலில் முன்னோடியாய் இருங்கள்." (4) "வெற்றிக்கான பாதை ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். எனவே, பலர் தேர்வு செய்யும் பாதையை தேர்ந்தெடுக்காமல் தங்களுக்கான சரியான பாதையை தயக்கமின்றி தேர்ந்தெடுங்கள்." (5) "அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்ளுங்கள். இனிமையான குணத்துடன் அனைவரிடமும் நடந்துகொள்வோருக்கு உலகமே சொர்க்கமாய் காட்சி அளிக்கும்." (6) "இறைவனைத் தேடி கோவில் கோவிலாய் யாத்திரை செய்வோரை விட அனைவருக்கும் மரியாதை கொடுத்து வாழ்பவரையே இறைவன் நேசிப்பார்."  (7) "இயன்ற உதவியை இயலாதோர்க்கு வழங்கி உதவுவோரது மனதில் இறைவன் வாழ்வார்....

மனதிற்கு ஊக்கம் அளிக்கும் சிறந்த சிந்தனை துளிகள்

அனைவரின் மனதிலும் நம்பிக்கையை விதைத்திடும் நம்பிக்கை துளிகள்👇👇 (1) "தன் கையையும் தன்னம்பிக்கையையும் நம்பினோர் என்றென்றும் கைவிடப்படார்.   (2) " எப்போதும் தங்கள் மீது நம்பிக்கை வைத்திடுங்கள். ஏனெனில், உங்களைத் தவிர எவராலும் உங்களை அதிகம் ஊக்குவிக்க முடியாது."   (3) "எப்போதும் முகத்தில் புன்னகையை அணிந்திடுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை வெகுவாய் உயர்த்திடும்."   (4) "உயர்வான எண்ணங்களை  வி தைத்திடுங்கள். உயர்ந்த செயல்களுக்கு உயர்ந்த சிந்தனைகளே முதற்படி ஆகும்."   (5) "வாழ பணம் அவசியமே. ஆனால், பணம் மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்வை வாழ்த்திட முடியாது."   (6) "சொர்க்கத்தை அடைய எளிய வழி இல்லாதார்க்கு உதவிடும் அறமே ஆகும்."   (7) "உன்னை உயர்த்த எண்ணும் தோழன் என்றென்றும் நீ செய்யும் தவறை சுட்டிக்காட்டத் தவற மாட்டான்."   (8) "நம்மை எதிர்த்தவனை நாமும் எதிர்ப்பதால் பலனில்லை. ஆனால், நம்மை எதிர்த்தவனையும் நம்மைப் பற்றி உயர்வாய் எண்ண வைப்பதே சிறந்த பண்பாகும்."   (9) "விதியை கடிந்து கொள்வோர், ' நமது வாழ்வில் ஏற்படும் அனை...

வெற்றிப் பயணத்திற்கு உதவும் சிந்தனை துளிகள்

  அன்றாட வாழ்வை வளமாக்க பின்பற்ற வேண்டியவை👇👇 சிந்தனை துளிகள் (1) "உண்மையான நண்பன் நம்முடைய இன்னல்களை தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால், இன்னல்களின் போது நம்முடன் இருப்பது அவசியம்." (2) "இலக்கை நோக்கி பயணிக்கும் போது உறுதியான நம்பிக்கையோடு கடினமாய் உழைத்தல் அவசியமாகும்." (3) "வாழ்க்கை போரில் ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது. இந்த போரில் வெற்றி பெற, நம்மை வீழ்த்த காத்திருக்கும் வீழ்ச்சிகளை, அவை நம்மை வீழ்த்தும் முன் நாம் அவற்றை வீழ்த்திவிட வேண்டும்." (4) "செய்த தவறைத் திருத்த இயலாது. ஆனால், முன்பு செய்த தவறு மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கலாம்." (5) "உங்கள் பலவீனங்களை உலகிடம் காண்பிக்காதீர். இந்த உலகம் உங்கள் பலவீனங்களை வைத்து விளையாட மட்டுமே ஆசைப்படும்." (6) " செயல்பட்டுவிட்டு சிந்திப்பதில் பயனில்லை; சிந்தித்து செயல்படுவதே சாலச்சிறந்தது." (7) " எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களின் ஆணிவேர் ஆகும்." (8) " தன்னம்பிக்கையும் முயற்சியும் ஒருவனை வெற்றியின் சிகரத்தை அடையச் செய்யும்."  (9) " அறிவுரையானது அன்போடு பகிர்...

அனைவருக்கும் நம்பிக்கை தந்திடும் சிந்தனை துளிகள்

வெற்றிப் பாதையை அடைய உதவும் சிந்தனை துளிகள் இதோ👇👇 (1) "நாளை செய்யலாம் என எந்த செயலையும் ஒதுக்கி வைக்காதீர்கள். ஏனெனில், இன்று தங்களால் செய்ய முடியாத செயல் நாளையும் செய்ய முடியாமல் போகலாம்." (2) "இன்னல்களாலும் நமது வாழ்வில் இனிமை ஏற்படலாம். ஏனெனில், நமக்கு வரும் இன்னல்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத்தருகிறது." (3) "துன்பம் நம்மை வருத்தினும் இன்பம் நம்மை மகிழ்வித்தாலும் அனைத்தும் ஒருநாள் முடிவுக்கு வரும் என நினைவில் கொள்ளுங்கள்." (4) "நம்மிடம் தன்னம்பிக்கையும் தைரியமும் இருப்பின் பல தடைகள் நம்மைத் தழுவினாலும் அனைத்தையும் துணிந்து எதிர்த்திடலாம்." (5) "நம்முடைய நேர்மறை எண்ணங்கள் தடைகள் பல வந்தாலும் அவற்றிலும் வெற்றிக்கான சில வாய்ப்புகள் இருப்பதாய் நமக்கு உணர்த்தும்." (6) "நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளிலும் தடைகள் இருப்பதாய் நமக்கு உணர்த்தும்." (7) "நம்மிடம் இருக்கும் பணத்தை விட நம்மிடம் இருக்கும் அழகான மனமே நம்மை பற்றி அனைவரும் தீர்மானிக்க உதவும்." (8) "எவருடைய ஆலோசனையையும் அலட்சியம் செ...

அனைவருக்கும் ஊக்கம் தந்திடும் சிந்தனை துளிகள்

சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டும் தலைசிறந்த சிந்தனை துளிகள்👇👇 (1) " தன் மாணாக்கரை மதிப்புமிக்க மனிதர்களாக உருவாக்க தன்னலமின்றி உழைப்பவரே ஆசிரியர். எனவே, அக்கறையோடு கண்டிக்கும் ஆசிரியரை அற்பமாய் நினைக்காதீர்." (2) "எத்தனை முறை தோல்வியால் துவண்டு விழுந்தாலும், 'மீண்டும் மீண்டு வருவேன்' என்ற நம்பிக்கை இருப்பின் வெற்றி நிச்சயம்.    (3)   "உன் எதிரியாக இருந்தாலும் அவன் நற்காரியங்களில் ஈடுபட்டால் ஆதரிக்க தயங்காதே; உன் நண்பனாய் இருப்பினும் அவன் கெடுதலில் ஈடுபட்டால் இடித்துரைக்க தயங்காதே."   (4) "எதுவுமே முடியாது என்று நினைத்தால் தோல்வி நிச்சயம்; எதுவும் முடியும் என்று நினைத்தால் வெற்றி நிச்சயம்".   (5) "   தவறான பாதையில் தவறியும் உன் நண்பன் செல்லாமலிருக்க உன் நண்பனை இடித்துரைப்பதும் தவறன்று."   (6)   "தன்னுள் இருக்கும் கோபத்தையும் கொடூர புத்தியையும் எவன் அடக்கி ஆள்கிறானோ அவனே மற்றவர்களை ஆளும் தகுதி உடையவனாவான்."   (7) "பிறரை நம்பினால் ஏமாளி ஆவாய்; உன்னை நம்பினால் வெற்றி காண்பாய்."   (8) "எதையும் மிகுந்த கவனத்துடன் தேர...

வெற்றிபெற அனைவரும் நிச்சயம் பின்பற்ற வேண்டியவை

வாழ்வில் வெற்றியை அடைய அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டியவை: (1) " கைரேகையை பார்த்து உங்கள் வாழ்வை முடிவு செய்துவிடாதீர்கள். நினைவில் கொள்ளுங்கள்- கை இல்லாதவருக்கும் வாழ்க்கை இருக்கிறது." 🤔🤔🤔 (2) " வாழ்வு இருளாக இருப்பதை எண்ணி ஒருபோதும் மனம் தளராதீர்கள். ஏனென்றால் சிறந்த கனவுகளும் இருளில் தான் தோன்றும்." (3) " தவறு செய்யாதவன் மனிதன் இல்லை; செய்த தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை!! " (4) " தன்னம்பிக்கை💪 முட்டுக்கட்டைகளையும் வெற்றிப் படிக்கட்டுகளாய் மாற்றும் வலிமை உடையது." (5) " நம்மால் முடிந்த வரை இல்லாதவர்க்கு கொடுத்து உதவுதல், இறைவனுக்கு தொண்டு செய்வதைக் காட்டிலும் மிகவும் சிறந்ததாகும்." இறை தொண்டு செய்வோர் முதலில் இல்லாதவர்க்கு தொண்டு செய்திடுங்கள்👍👍. (6) " ஒருவரை சூழ்ச்சி செய்து வென்றீர்களானால் நினைவில் கொள்ளுங்கள் நீங்களும் ஒருநாள் சூழ்ச்சியால் வீழ்த்தப்படுவீர்கள் என்று."  சூழ்ச்சி நிச்சயம் வீழ்த்தப்படும், ஆனால் முயற்சி என்றென்றும் உயர்த்தப்படும்💪💪. (7) " நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்; நம்பிக்கை இழந்த...

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog