வாழ்வின் எதார்த்தத்தை விளக்கும் சிந்தனை துளிகள்
(1) " கடமையை செய்யாமல் தப்பிக்க, அடுத்தவர் மீது பழி சுமத்தாதீர். உங்கள் காரணங்களை இறைவன் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்."
(2) " தவறான பாதை என தெரிந்தால், உலகமே அந்த பாதையில் பயணித்தாலும் நீங்கள் பயணிக்காதீர்.
(3) " வாழ்வில் வெற்றி பெற, இறைவன் தரும் அனைத்து பரீட்சையிலும் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை. அவர் வைக்கும் அனைத்து தேர்வுகளிலும் மன உறுதியோடு கலந்து கொண்டாலே போதும்."
(4) " தீயவரிடம் இருந்து என்றென்றும் விலகி இருங்கள். உங்களுக்கு தீங்கு விளைவித்த நபருக்கு நீங்களும் தீங்கு விளைவிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை."
(5) " சொற்களை ஆராய்ந்து பயன்படுத்துங்கள். ஆராயாமல் பேசும் கடுமையான சொற்கள் ஆபத்தை அள்ளித்தரும் அபாயம் வாய்ந்தது."
(6) " வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய, அன்றைய பணியை அன்றே நிறைவேற்றினாலே போதும்."
(7) " அடுத்தவருடைய பலவீனங்களை அறிய துடிக்காதீர்கள். அதுபோல, இந்த உலகமும் உங்களது பலவீனங்களை அறிய முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்."
(8) " அடுத்தவரை திருப்திப்படுத்த உங்கள் வாழ்வை அழித்து கொள்ளாதீர்கள். அதே நேரத்தில், மனம் விரும்பாத காரியத்தில் மனதை வற்புறுத்தி ஈடுபடுத்தாதீர்.
(9) " உங்களது கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நினைத்து வருந்தி பயனில்லை. கடந்த காலத்தை எவராலும் மாற்றியமைக்க முடியாது."
(10) " அனைத்து சூழ்நிலையிலும், நிகழ்காலத்தின் மீது நிகரற்ற கவனம் செலுத்தினால், வருங்காலம் மனம் விரும்பும் வண்ணம் அமையும்.
மேலும் சிந்தனை துளிகளை வாசிக்க, "சிந்தனை துளிகள்" என்ற லேபிலை பயன்படுத்துங்கள். சிந்தனை துளிகளை பற்றிய உங்கள் கருத்துக்களை கமண்ட் செய்யுங்கள். மேலும், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.