வாழ்வில் வளர்ச்சி பெற தவறாது இதை வாசியுங்கள்
வாழ்வில் வளர்ச்சி அடைந்து மகிழ்ச்சியோடு வாழ விரும்பும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வரிகள்👇👇
(1) "உன்னை எவரும் தாழ்த்தி பேசுவதால் நீ தாழ்ந்து விட மாட்டாய். நினைவில் கொள்- தாழ்ந்தவர்கள் மனம் எப்போதும் தாழ்வாகத்தான் சிந்திக்கும்."
(2) "உனக்கு கூறப்படும் அறிவுரைகள் அனைத்தையும் கவனித்துக்கொள். ஆனால், உன் மனம் சொல்லும் வழியையே பின்பற்று."
(3) " ஒரு தவறை அனைவரும் செய்வதால் நாமும் செய்ய வேண்டும் என்பது அவசியமன்று. உங்கள் மனதிற்கு தவறு என தெரிந்தால், எவருக்காகவும் அத்தவறை செய்யாதீர்."
(4) "நீங்கள் எத்தனை முறை தோல்வியை தழுவினாலும் முயற்சி செய்வதை நிறுத்திவிடாதீர். முடிவற்ற முயற்சிக்கு இறைவன் அருள் நிறைந்த வெற்றியை பரிசளிப்பார்."
(5) "உங்கள் மீது நம்பிக்கை இல்லாத போது வேறு எவர் மீது நம்பிக்கை வைத்தாலும் அந்த நம்பிக்கை வீணாவது உறுதியே."
(6) "மனதில் உறுதியோடு இலக்கை நோக்கி முதற்முயற்சி செய்தால், உங்கள் மன உறுதியே உங்கள் இலக்கை அடைய உதவி செய்யும்.
(7) "இன்றைய முயற்சி தோல்வியை அடைந்தால் நாளைய முயற்சி வெற்றியை அடையும். ஆனால், முயற்சியே செய்யாதவன் வாழ்வில் வெற்றிக்கு இடமே கிடையாது.
(8) "உங்கள் கனவுகள் மெய்ப்பட, உங்கள் முயற்சி மிகவும் அவசியம். முயற்சியின்றி கனவு காண்பது வெறுங்கையால் முழம் போடுவது போன்றதாகும்."
(9) "உலகமே உங்கள் தோல்வியை உறுதியாக நிர்ணயம் செய்தாலும் உங்கள் மனம் மீண்டும் முயற்சிக்க உறுதியாய் இருப்பின் வெற்றி உங்களை அடைவது உறுதி."
(10) " பலர் பின்பற்றும் தவறான பாதையில் பயணிப்பதை விட சரியான பாதையை தனி நபராய் பின்பற்றுவதே பெருமை தரும்."
மேலும் சிந்தனை துளிகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள்.
எங்களது சிந்தனை துளிகள் தங்கள் சிந்தைக்கு மேன்மை அளித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை கமண்ட் செய்வதோடு தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊
💯💯🔥🔥
ReplyDelete