அவசியம் வாசிக்க வேண்டிய அற்புதமான சிந்தனைகள்

அற்புதமான வாழ்வுக்கு வழிவகுக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான சிந்தனை துளிகள்👇👇


(1) "உங்களுக்கு பிடித்தவற்றையே எப்போதும் செய்யுங்கள். ஏனெனில், இந்த உலகில் உள்ள அனைவரையும் ஒருபோதும் உங்களால் திருப்திப்படுத்த இயலாது."


(2) "தோல்வியில் இருந்து தப்பிக்க வாழ்வை வெறுப்பது ஒருபோதும் தீர்வாகாது. மன உறுதியோடு தோல்வியை எதிர்த்து போராடுவது ஒன்றே பலனளிக்கும்."


(3) "இறைவன் உங்களது அனைத்து முயற்சிக்கும் தோல்வியையே பரிசளித்தாலும் மனம் கலங்காதீர்கள். நினைவில் கொள்ளுங்கள்- இறைவன் நீங்கள் முயற்சி செய்வதை விட உயர்வான செயலுக்கு உங்களை ஏற்கெனவே தேர்வு செய்திருப்பார்."


(4) "ஒருவரிடம் கடுஞ்சொல் கூறுவதற்கு முன், உங்களிடம் யாரேனும் கடுஞ்சொல் கூறினால் உங்கள் மனம் எவ்வாறு வேதனைப்படும் என்பதை எண்ணிப் பாருங்கள்."


(5) "ஒருவர் உங்களுக்கு தீங்கு செய்ததற்காக நீங்களும் தீங்கு செய்து பழிவாங்குவதால் மனதிற்கு நிம்மதி கிடைக்காது."


(6) "ஒருவரிடம் மனதை பார்த்து பழகிடுங்கள்; உருவத்தை பார்த்து அல்ல. ஏனெனில், மின்னுவதால் கண்ணாடியும் பொன்னும் ஒன்றாக முடியாது."


(7) "அடுத்தவரைப் பற்றி அறிய துடிக்குப்பதற்கு முன் உங்களைப் பற்றி முதலில் முழுமையாய் அறிந்து கொள்ளுங்கள்."


(8) "நீங்கள் செய்யும் தவறுகள், நீங்கள் கூறும் பொய்கள் என அனைத்திருக்கும் பொறுப்பு வாய்ந்தவர் நீங்கள் மட்டும் தான்."


(9) "பழிக்கு பழி வாங்கும் பழக்கம் என்றுமே உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் தீர்வு அல்ல; அது மேலும் உங்கள் பிரச்சனைகள் தொடரவே வழிவகுக்கும்."


(10) "அன்பான வார்த்தை அனைவரின் மனதையும் மகிழ்வித்து ஆறுதல் தரும்; ஆனால், கடுமையான வார்த்தை அனைவரின் மனதையும் நொறுங்கச் செய்யும். எனவே, அன்பாய் பேசுங்கள் இல்லையேல் மௌனம் காத்திடுங்கள்."

 


 மேலும் சிந்தனை துளிகளுக்கு, இங்கே தொடவும்...


சிந்தனை துளிகள் உங்களுக்கு பலனளித்திருக்கும் என நம்புகிறோம். சிந்தனை துளிகளை பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊

Comments

Read our Popular Posts

Followers of Our Blog