உன்னதமான வாழ்க்கை பெற பின்பற்ற வேண்டியவை
உன்னதமான வாழ்வுக்கு வழிகாட்டும் மிகச்சிறந்த சிந்தனை துளிகளை வாசித்து மகிழுங்கள்👇👇
(1) "உங்களை எவரும் மதிக்கவில்லை என நீங்கள் கவலைப்படுவதற்கு முன், நீங்கள் அனைவருக்கும் எவ்வளவு மரியாதை கொடுத்தீர்கள் என சிந்தித்து பாருங்கள். காரணம் புரியும்."
(2) "மரியாதையானது, மனதில் இருந்து வர வேண்டும். நிர்பந்தத்தின் பேரில் செலுத்தப்படும் மரியாதை, என்றாவது ஒருநாள் அவமானத்தை நிச்சயம் தரும்."
(3) "உங்களது கடமையை நிறைவேற்றாமல், அடுத்தவர் மீது குறை கூறாதீர்கள். ஏனெனில், கடமை உங்களுடையதே. எனவே, உங்கள் அலட்சியத்தை மறைக்க அடுத்தவர் மீது பழி போடாதீர்கள்."
(4) "மனதில் மார்க்கம் இருப்பவரால், அரிய காரியத்தையும் கைவசப்படுத்த முடியும். ஆனால், மனதில் மார்க்கம் இல்லாதவர், கடமைகளில் இருந்து தப்பிக்கவே எப்போதும் காரணம் கண்டுபிடிப்பர்."
(5) "உங்கள் தவறுகளை நீங்கள் உணரவில்லை என்றால், அடுத்தவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் தகுதி உங்களுக்கு கிடையாது."
(6) "உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும் இடத்தில் பேசுங்கள். மதிப்பு கொடுக்கப்படாத இடத்தில், மௌனம் சாதிப்பதே சாலச் சிறந்தது."
(7) "நீங்கள் எவருக்கும் உதவ தயாராக இல்லையென்றால், அடுத்தவரின் உதவியையும் எதிர்ப்பார்க்க தயாராகாதீர்கள்."
(8) "நீங்கள் எப்போதும் உங்களது வழியையே பின்பற்றுங்கள் . ஏனெனில், வெற்றி பெற்றவுடன் ஆதரவு தரும் இவ்வுலகம், தோல்வியின் போது உங்களை ஆதரிக்க துளியும் விரும்பாது."
(9) "நல்லவர்களுக்கு நல்லவர்களாய் இருங்கள். உலகில் உள்ள அனைவருக்கும் அனைத்து நேரங்களிலும், நல்லவராய் இருக்காதீர்கள். ஏனெனில், இவ்வுலகமானது, உங்கள் நற்குணங்களை வைத்து விளையாடவே முயற்சிக்கும்."
(10) "நிம்மதியான வாழ்வு பெறுவதற்கான எளிய வழி, துன்பம் தருபவரிடத்தில் இருந்து விலகிச்செல்வதே."
எங்களது சிந்தனை துளிகள் பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் சிந்தனை துளிகளுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
Correct💯
ReplyDeleteCorrect
ReplyDeleteமிகவும் பயனுள்ள துளிகள்
ReplyDeleteTrue.
ReplyDeletePerfectly about the true situation of life.