வெற்றிப் பயணத்திற்கு உதவும் சிந்தனை துளிகள்

 அன்றாட வாழ்வை வளமாக்க பின்பற்ற வேண்டியவை👇👇

சிந்தனை துளிகள்

(1) "உண்மையான நண்பன் நம்முடைய இன்னல்களை தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால், இன்னல்களின் போது நம்முடன் இருப்பது அவசியம்."

(2) "இலக்கை நோக்கி பயணிக்கும் போது உறுதியான நம்பிக்கையோடு கடினமாய் உழைத்தல் அவசியமாகும்."

(3) "வாழ்க்கை போரில் ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது. இந்த போரில் வெற்றி பெற, நம்மை வீழ்த்த காத்திருக்கும் வீழ்ச்சிகளை, அவை நம்மை வீழ்த்தும் முன் நாம் அவற்றை வீழ்த்திவிட வேண்டும்."

(4) "செய்த தவறைத் திருத்த இயலாது. ஆனால், முன்பு செய்த தவறு மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கலாம்."


(5) "உங்கள் பலவீனங்களை உலகிடம் காண்பிக்காதீர். இந்த உலகம் உங்கள் பலவீனங்களை வைத்து விளையாட மட்டுமே ஆசைப்படும்."


(6) "செயல்பட்டுவிட்டு சிந்திப்பதில் பயனில்லை; சிந்தித்து செயல்படுவதே சாலச்சிறந்தது."

(7) "எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களின் ஆணிவேர் ஆகும்."

(8) "தன்னம்பிக்கையும் முயற்சியும் ஒருவனை வெற்றியின் சிகரத்தை அடையச் செய்யும்." 

(9) "அறிவுரையானது அன்போடு பகிர்தல் அமிர்தமாகும்.ஏனென்றால், அன்பின் சக்தி அனைத்தைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாகும்."

(10) "நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் தனிக்கவனம் அவசியம்.ஏனென்றால், உயர்ந்த குணம் உடையோரின் நட்பானது வாழ்வுக்கு என்றென்றும் நன்மை பயக்கும்.ஆனால், தீய குணம் உடையோரின் நட்பானது நம் வாழ்வை அழித்திட வழி வகுக்கும்."


மேலும் இதுபோன்ற சிந்தனை துளிகளுக்கு, இங்கே தொடவும்...

வாழ்வை வளமாக்க துடிக்கும் அனைவருக்கும் எங்களது சிந்தனை துளிகள் சிறப்பாய் உதவி இருக்கும் என நம்புகிறோம். சிந்தனை துளிகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள் மற்றும் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்திடுங்கள்.



Comments

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog