அனைவருக்கும் நம்பிக்கை தந்திடும் சிந்தனை துளிகள்
வெற்றிப் பாதையை அடைய உதவும் சிந்தனை துளிகள் இதோ👇👇
(1) "நாளை செய்யலாம் என எந்த செயலையும் ஒதுக்கி வைக்காதீர்கள். ஏனெனில், இன்று தங்களால் செய்ய முடியாத செயல் நாளையும் செய்ய முடியாமல் போகலாம்."
(2) "இன்னல்களாலும் நமது வாழ்வில் இனிமை ஏற்படலாம். ஏனெனில், நமக்கு வரும் இன்னல்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத்தருகிறது."
(3) "துன்பம் நம்மை வருத்தினும் இன்பம் நம்மை மகிழ்வித்தாலும் அனைத்தும் ஒருநாள் முடிவுக்கு வரும் என நினைவில் கொள்ளுங்கள்."
(4) "நம்மிடம் தன்னம்பிக்கையும் தைரியமும் இருப்பின் பல தடைகள் நம்மைத் தழுவினாலும் அனைத்தையும் துணிந்து எதிர்த்திடலாம்."
(5) "நம்முடைய நேர்மறை எண்ணங்கள் தடைகள் பல வந்தாலும் அவற்றிலும் வெற்றிக்கான சில வாய்ப்புகள் இருப்பதாய் நமக்கு உணர்த்தும்."
(6) "நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளிலும் தடைகள் இருப்பதாய் நமக்கு உணர்த்தும்."
(7) "நம்மிடம் இருக்கும் பணத்தை விட நம்மிடம் இருக்கும் அழகான மனமே நம்மை பற்றி அனைவரும் தீர்மானிக்க உதவும்."
(8) "எவருடைய ஆலோசனையையும் அலட்சியம் செய்யாமல் கேட்டு கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் லட்சியங்களை அடைய அவை உதவலாம்."
(9) "யார் மனதையும் வார்த்தைகளால் காயப்படுத்தும் முன் நீங்கள் அவர் இடத்தில் இருந்தால் எவ்வாறு உணர்வீர்கள் என சிந்தித்து பாருங்கள்."
(10) " நாளை பற்றி மட்டுமே சிந்தித்து இன்று உங்களிடம் இருக்கும் பொன் போன்ற நேரத்தை வீணாக்காதீர்கள். "
மேலும் இது போன்ற சிந்தனை துளிகளுக்கு, இங்கு தொடவும்...
சிந்தனை துளிகள் பற்றிய தங்கள் கருத்தை பதிவு செய்ய தவறாதீர்கள். பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊
Comments
Post a Comment
Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.