மனதிற்கு ஊக்கம் அளிக்கும் சிறந்த சிந்தனை துளிகள்
அனைவரின் மனதிலும் நம்பிக்கையை விதைத்திடும் நம்பிக்கை துளிகள்👇👇
(1) "தன் கையையும் தன்னம்பிக்கையையும் நம்பினோர் என்றென்றும் கைவிடப்படார்.
(2) "எப்போதும் தங்கள் மீது நம்பிக்கை வைத்திடுங்கள். ஏனெனில், உங்களைத் தவிர எவராலும் உங்களை அதிகம் ஊக்குவிக்க முடியாது."
(3) "எப்போதும் முகத்தில் புன்னகையை அணிந்திடுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை வெகுவாய் உயர்த்திடும்."
(4) "உயர்வான எண்ணங்களை விதைத்திடுங்கள். உயர்ந்த செயல்களுக்கு உயர்ந்த சிந்தனைகளே முதற்படி ஆகும்."
(5) "வாழ பணம் அவசியமே. ஆனால், பணம் மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்வை வாழ்த்திட முடியாது."
(6) "சொர்க்கத்தை அடைய எளிய வழி இல்லாதார்க்கு உதவிடும் அறமே ஆகும்."
(7) "உன்னை உயர்த்த எண்ணும் தோழன் என்றென்றும் நீ செய்யும் தவறை சுட்டிக்காட்டத் தவற மாட்டான்."
(8) "நம்மை எதிர்த்தவனை நாமும் எதிர்ப்பதால் பலனில்லை. ஆனால், நம்மை எதிர்த்தவனையும் நம்மைப் பற்றி உயர்வாய் எண்ண வைப்பதே சிறந்த பண்பாகும்."
(9) "விதியை கடிந்து கொள்வோர், 'நமது வாழ்வில் ஏற்படும் அனைத்து செயல்களுக்கும் நம்மை விட பொறுப்பு வாய்ந்தவர் வேரொருவரும் இருக்க முடியாது' என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும் ."
(10) "பிறரை நம்பியவன் ஏமாளி ஆகிறான்; தன்னை நம்பியவன் வெற்றி காண்கிறான்."
மேலும் சிந்தனை துளிகளுக்கு, இங்கே தொடவும்...
சிந்தனை துளிகள் தங்கள் அனைவரின் மனதிலும் சிறந்த எண்ணங்களை விதைத்திருக்கும் என நம்புகிறோம். பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள் மற்றும் சிந்தனை துளிகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவு செய்திடுங்கள்...😊
Awesome
ReplyDelete