அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்
எல்லோரும் வாசிக்க வேண்டிய எளிமையான சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்👇👇
(1) " அடுத்தவர்க்கு சூழ்ச்சி செய்து வெற்றியை அனுபவிப்பதை விட, நேர்மையான மனதுடன் தோல்வியை ஏற்பதே சிறந்த செயல்."
(2) " உங்களை ஏமாற்றியவர்களை நீங்களும் ஏமாற்ற வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், அவரிடம் மீண்டும் ஏமாறாமல் இருக்கும் மன தெளிவை நீங்கள் ஏற்படுத்துதல் அவசியமாகும்.
(3) " உங்களுக்கு சரியாக தோன்றுவது பிறருக்கு தவறாகவும் தோன்றலாம். நினைவில் கொள்ளுங்கள்- உங்கள் எதிரில் நிற்பவர்க்கு உங்களது வலப்பக்கம் இடப்பக்கமாகத் தான் தெரியும்."
(4) " யாரோ ஒருவரால் செய்ய முடிந்த செயல், மனிதர்கள் அனைவராலும் செய்ய முடிந்த செயலாகும். ஆனால், அதை நினைவேற்ற முழுமனதோடு முயற்சி செய்ய வேண்டும்."
(5) " உங்கள் மீது நம்பிக்கை இல்லாத போது, இறைவன் மீது நம்பிக்கை வைத்தும் பலனில்லை."
(6) " முடிந்தவரை சிரித்து வாழுங்கள். ஏனெனில், வாழ்வு மிகவும் சிறியது."
(7) " உங்கள் மனதில் நம்பிக்கை இருக்கும் வரை, எவராலும் உங்களை முழுமையாய் தோற்கடிக்க முடியாது."
(8) " கடந்தகால வாழ்வை பற்றி கண்கலங்கி கவலைப்படுவோர், மனதில் கொள்ளுங்கள்- கடந்தகாலம் கடந்து போய் விட்டது. எனவே, நீங்களும் கடந்தகாலத்தை கடந்து செல்ல பழகுங்கள்."
(9) " கடந்த காலத்தை பற்றி கவலைப்பட்டு, நிகழ்காலத்தை வீணாக்கினால், வருங்காலத்திலும் நீங்கள் நிகழ்காலம் கடந்ததை எண்ணி கவலைப்படவே நேரும்."
(10) " மனம் அறியாமல் தவறு செய்தாலும், செய்தது தவறு என தெரிந்தால், உங்களைத் திருத்த தயங்காதீர்."
எங்களது சிந்தனை துளிகள் உங்கள் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கும் என நம்புகிறோம்.
மேலும் சிந்தனை துளிகளை வாசிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள்.
எங்களது சிந்தனை துளிகள் பற்றிய தங்களது கருத்துக்களை கமண்ட் செய்வதோடு, தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
💯💯👍
ReplyDelete👌😇😇😇💣
ReplyDelete