வளர்ப்பு பிராணிகள் மற்றும் பறவைகள் பற்றிய புதிர்கள்
விடுகதைகளை வாசித்து செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளை பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்களை அறிந்து கொள்ளுங்கள் 👇👇
(1) மனிதர்களை விட பத்தாயிரம் மடங்கு சிறப்பான மோப்ப சக்தி கொண்ட இந்த வளர்ப்புப் பிராணியால் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தை மட்டுமே எளிதில் கண்டறிந்து கொள்ள இயலும். அது என்ன?_____.
விடை: நாய்.
(2) மனிதர்களை விட ஐந்து மடங்கு கூர்மையான கேட்கும் திறன் கொண்ட இந்த செல்லப் பிராணியால் இனிப்பு சுவையைச் சுவைக்க முடியாது. அது என்ன?_____.
விடை: பூனை.
(3) ஒரு நாளில் சுமார் எட்டு மணி நேரத்தைச் சாப்பிடுவதில் செலவழிக்கும் இந்த வளர்ப்பு பிராணியால் ஆறு மைல்கள் தூரம் வரை சத்தத்தைக் கேட்க முடியும். அது என்ன?_____.
விடை: பசு.
(4) தனது உதடுகளால் உணவைப் பற்றிக்கொள்ளும் பண்பு கொண்ட இந்த வளர்ப்புப் பிராணியின் கண்ணின் மணி (பியூப்பிள்) செவ்வக வடிவில் இருக்கும். அது என்ன?_____.
விடை: ஆடு.
(5) மிகச்சிறந்த ஞாபகச் சக்தி கொண்ட இந்த வளர்ப்பு பிராணியானது, தன்னுடைய தோற்ற அமைப்பு கொண்ட குதிரையை விட பலம் பொருந்தியதாய் இருக்கும். அது என்ன?_____.
விடை: கழுதை.
(6) மனிதர்களின் முகங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் வளர்ப்புப் பறவை இது. ஆதலால், உணவிட்டவரைத் தேடி வந்தும் விரட்டியடிப்பவரை விட்டு விலகியும் செல்லும் பண்பு கொண்டது. அது என்ன?_____.
விடை: புறா.
(7) அனைத்து நிறங்களையும் சிறப்பாகக் காணும் இந்த வளர்ப்பு பறவையானது மனிதர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது. அது என்ன?_____.
விடை: கோழி.
(8) உப்பு நீரிலும் நல்ல நீரிலும் வாழும் திறன் கொண்ட வளர்ப்பு பறவை. அன்டார்ட்டிகா தவிர மற்ற அனைத்து கண்டத்திலும் காணப்படும் பறவை. அது என்ன?_____.
விடை: வாத்து.
(9) அதிபுத்திசாலியாக இருக்கும் வளர்ப்பு பறவை. இந்த பறவை இனத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பறவையால் பறக்க இயலாது. அது என்ன?_____.
விடை: கிளி.
(10) அனைவரையும் கவர்ந்திழுக்கும் குரல் கொண்ட இந்த வளர்ப்பு பறவைக்கு கூடு கட்ட தெரியாது. அது என்ன?_____.
விடை: குக்கூ.
உங்கள் அனைவருக்கும் விடுகதைகள் பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, கீழே இருக்கும் லேபிலை பயன்படுத்துங்கள்.
விடுகதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் பிடித்திருந்தால், விடுகதைகளை தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...😄
மிகவும் வித்தியாசமானது.
ReplyDeleteஎனக்கு பிடித்திருந்தது. 👌🏻
ஆஹா! அற்புதமான புதிர்கள்.
ReplyDelete👌👌
இதுவரை நான் அறிந்திராத பல அற்புதமான தகவல்களை அறிந்து கொண்டேன் மிகவும் நன்றாக இருந்தது👌🏻👌🏻👌🏻
ReplyDelete