வளர்ப்பு பிராணிகள் மற்றும் பறவைகள் பற்றிய புதிர்கள்

விடுகதைகளை வாசித்து செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளை பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்களை அறிந்து கொள்ளுங்கள் 👇👇


(1) மனிதர்களை விட பத்தாயிரம் மடங்கு சிறப்பான மோப்ப சக்தி கொண்ட இந்த வளர்ப்புப் பிராணியால் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தை மட்டுமே எளிதில் கண்டறிந்து கொள்ள இயலும். அது என்ன?_____.

விடை: நாய்.


(2) மனிதர்களை விட ஐந்து மடங்கு கூர்மையான கேட்கும் திறன் கொண்ட இந்த செல்லப் பிராணியால் இனிப்பு சுவையைச் சுவைக்க முடியாது. அது என்ன?_____.

விடை: பூனை.


(3) ஒரு நாளில் சுமார் எட்டு மணி நேரத்தைச் சாப்பிடுவதில் செலவழிக்கும் இந்த வளர்ப்பு பிராணியால் ஆறு மைல்கள் தூரம் வரை சத்தத்தைக் கேட்க முடியும். அது என்ன?_____.

விடை: பசு.


(4) தனது உதடுகளால் உணவைப் பற்றிக்கொள்ளும் பண்பு கொண்ட இந்த வளர்ப்புப் பிராணியின் கண்ணின் மணி (பியூப்பிள்) செவ்வக வடிவில் இருக்கும். அது என்ன?_____.

விடை: ஆடு.


(5) மிகச்சிறந்த ஞாபகச் சக்தி கொண்ட இந்த வளர்ப்பு பிராணியானது, தன்னுடைய தோற்ற அமைப்பு கொண்ட குதிரையை விட பலம் பொருந்தியதாய் இருக்கும். அது என்ன?_____.

விடை: கழுதை.


(6) மனிதர்களின் முகங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் வளர்ப்புப் பறவை இது. ஆதலால்,  உணவிட்டவரைத் தேடி வந்தும் விரட்டியடிப்பவரை விட்டு விலகியும் செல்லும் பண்பு கொண்டது. அது என்ன?_____.

விடை: புறா.


(7) அனைத்து நிறங்களையும் சிறப்பாகக் காணும் இந்த வளர்ப்பு பறவையானது மனிதர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது. அது என்ன?_____.

விடை: கோழி.


(8) உப்பு நீரிலும் நல்ல நீரிலும் வாழும் திறன் கொண்ட வளர்ப்பு பறவை. அன்டார்ட்டிகா தவிர மற்ற அனைத்து கண்டத்திலும் காணப்படும் பறவை. அது என்ன?_____.

விடை: வாத்து.


(9) அதிபுத்திசாலியாக இருக்கும் வளர்ப்பு பறவை. இந்த பறவை இனத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பறவையால் பறக்க இயலாது. அது என்ன?_____.

விடை: கிளி.


(10) அனைவரையும் கவர்ந்திழுக்கும் குரல் கொண்ட இந்த வளர்ப்பு பறவைக்கு கூடு கட்ட தெரியாது. அது என்ன?_____.

விடை: குக்கூ.


உங்கள் அனைவருக்கும் விடுகதைகள் பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, கீழே இருக்கும் லேபிலை பயன்படுத்துங்கள். 

விடுகதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் பிடித்திருந்தால், விடுகதைகளை தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...😄

Comments

  1. Anika 🧚🏻‍♀️November 5, 2020 at 2:37 PM

    மிகவும் வித்தியாசமானது.
    எனக்கு பிடித்திருந்தது.
    👌🏻

    ReplyDelete
  2. ஆஹா! அற்புதமான புதிர்கள்.
    👌👌

    ReplyDelete
  3. இதுவரை நான் அறிந்திராத பல அற்புதமான தகவல்களை அறிந்து கொண்டேன் மிகவும் நன்றாக இருந்தது👌🏻👌🏻👌🏻

    ReplyDelete

Post a Comment

Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog