வாழ்வுக்கு வளமை சேர்க்க உதவும் சிந்தனை துளிகள்
உயர்ந்த வாழ்வை வாழ பின்பற்ற வேண்டிய சிந்தனை துளிகள்👇👇 (1) நீங்கள் செல்வச் செழிப்பான வாழ்வை வாழ விரும்பினால், ஆரோக்கியமான வாழ்வை முதலில் தேடி கொள்ளுங்கள். ஏனெனில், ஆரோக்கியத்தை விட உயர்ந்த செல்வம் இவ்வுலகில் இல்லை. (2) அடுத்தவருடன் அனாவசியமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கு முன்பு உங்களின் பொன்னான நேரம் வீணாவதை சிந்தனையில் வைத்து கொள்ளுங்கள். (3) பிறருடைய குணத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு முன் அவரைப் பற்றி புகழோ பழியோ சொல்லாதீர்கள். ஏனெனில், அது எந்நேரத்திலும் உங்களுக்கு ஆபத்தை தேடி தரலாம். (4) யாரேனும் உங்கள் மீது குறைகள் பல கூறி உங்களை திருந்த வலியுறுத்தினால் அதை எண்ணி மனம் கலங்க வேண்டாம். ஆனால், அவர் கூறிய குறைகள் எவருக்கேனும் இடையூறுகள் ஏற்படுத்துவதாக இருப்பின், அறிவுரையை ஏற்று தங்கள் குணங்களை மாற்றிக்கொள்வதே சிறந்ததாகும். (5) நீங்கள் அடுத்தவருக்கு நன்மை செய்தால், இறைவன் உங்கள் வாழ்வை நிச்சயமாக உயர்த்துவார். (6) உள்ளத்தால் எவருக்கும் துயரம் தராமல் வாழ்ந்து வருபவனின் வாழ்க்கையில் தோல்விகளுக்கு என்றென்றும் இடமில்லை. (7) எவருடைய மனதையும் காயப்படுத்தி வாழ்வை வாழாதீர். ஏனெனில்...