மனம் கவரும் விடைகளோடு அற்புதமான விடுகதைகள்
நூறுக்கும் அதிகமான எங்களது அனைத்து விடுகதைகளையும் விடைகளோடு வாசித்து மகிழ, கீழே கொடுக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள்.
மனம் கவர்ந்திடும் விடுகதைகள் விடைகளுடன்👇👇
(1) பாறையில் ஒருமுறை வருவேன். பாப்பாவில் இருமுறை வருவேன். ஆனால், பள்ளியில் ஒருமுறையும் வரமாட்டேன். நான் யார்?_____.
விடை: எழுத்து "பா."
(2) தொட்டால் சுடுவதை சுட்டிடும் ஓரெழுத்து என்ன?_____.
விடை: தீ.
(3) அரசனையும் பசுவையும் குறிக்கும் ஓரெழுத்து என்ன?_____.
விடை: கோ.
(4) என்னிடம் முட்கள் உண்டு. ஆனால், அதை வைத்து நான் எவரையும் குத்த மாட்டேன். நான் யார்?_____.
விடை: கடிகாரம்.
(5) பயன்படுத்துவதற்கு, முதலில் அதை உடைத்தாக வேண்டும். அது என்ன?_____.
விடை: முட்டை.
(6) என்னுடைய முதலெழுத்து வீதியில் உண்டு, ஆனால், விதியில் இல்லை. என்னுடைய இரண்டாம் எழுத்து சுத்தத்தில் உண்டு, ஆனால், பித்தத்தில் இல்லை. இரு எழுத்துக்கள் கொண்ட நான், ஒரு கட்டளைச் சொல் ஆவேன். நான் யார்?_____.
விடை: வீசு.
(7) நின்று கொண்டே தூங்கும் திறன் கொண்டவன், காலணிகளையும் கழட்டாமல் உறங்கும் பழக்கம் கொண்டவன். அவன் யார்?_____.
விடை: குதிரை.
(8) உங்கள் வாழ்வுக்கு இன்றியமையாததை வழங்குபவன் நான். மேலிருந்து கீழே வரும் நான், திரும்பிச் செல்லும் பழக்கம் அற்றவன். நான் யார்?_____.
விடை: மழை.
(9) கொட்டினால் அள்ளமுடியாதவை. இன்பமும் தர வல்லது. துன்பமும் தர வல்லது. அது என்ன?_____
விடை: வார்த்தைகள்.
(10) நிலத்திலும் நீரிலும் நூற்றைம்பது ஆண்டுகள் வாழும் தகுதியுடையவன். எங்கு சென்றாலும் என் வீட்டை கவனமாய் சுமந்தே செல்வேன். நான் யார்?_____.
விடை: ஆமை.
எங்களது விடுகதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். மேலும் விடுகதைகளுக்கு, கீழே இருக்கும் லேபிலை பயன்படுத்துங்கள். விடுகதைகளை பற்றி கருத்து தெரிவிப்பதோடு, தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்...😄
nice
ReplyDelete🔥💯
ReplyDelete😇 smart
ReplyDelete