மேன்மையான வாழ்வுக்கு சிறப்பான சிந்தனை துளிகள்
மேன்மையான வாழ்வுக்கு சிறப்பான சிந்தனை துளிகளுடன் நாளை துவங்கிடுங்கள்👇👇
(1) "வெற்றியை அறுவடை செய்ய துடிக்கும் மனதிற்கு, இலக்கை விதைப்பதோடு தன்னம்பிக்கையயும் உரமிடுவது மிகவும் அவசியமாகும்."
(2) "முழுமனதின் ஈடுபாட்டுடன் செயலைச் செய்யும் பொழுது, தடைகள் பல வந்தாலும் அதை தகர்த்த மூளையை மனம் ஊக்குவிக்கும்."
(3) "உங்களைச் சுற்றி இருக்கும் நபர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதற்கு நீங்கள் முதலில் முன்னோடியாய் இருங்கள்."
(4) "வெற்றிக்கான பாதை ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். எனவே, பலர் தேர்வு செய்யும் பாதையை தேர்ந்தெடுக்காமல் தங்களுக்கான சரியான பாதையை தயக்கமின்றி தேர்ந்தெடுங்கள்."
(5) "அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்ளுங்கள். இனிமையான குணத்துடன் அனைவரிடமும் நடந்துகொள்வோருக்கு உலகமே சொர்க்கமாய் காட்சி அளிக்கும்."
(6) "இறைவனைத் தேடி கோவில் கோவிலாய் யாத்திரை செய்வோரை விட அனைவருக்கும் மரியாதை கொடுத்து வாழ்பவரையே இறைவன் நேசிப்பார்."
(7) "இயன்ற உதவியை இயலாதோர்க்கு வழங்கி உதவுவோரது மனதில் இறைவன் வாழ்வார்."
(8) "ஒருவன் செல்வந்தனாக இருப்பினும் அவனிடத்தில் அன்பு செய்யும் மனம் இல்லையெனில், பணம் இருந்தும் வாழ்வு நிம்மதியற்றதாக இருக்கும்."
(9) "தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு வழங்கப்படும். ஆனால், மன்னிப்பு கேட்டுவிடலாம் என்ற மனதுடன் செய்யும் தவறுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது."
(10) "நீங்கள் விரும்பாதவருக்கு அவர் விரும்பாததை செய்வதை விட, அவரிடமிருந்து விலகிச் செல்வதே சாலச்சிறந்தது ஆகும்."
மேலும் சிந்தனை துளிகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்தவும்.
சிந்தனை துளிகள் உங்கள் சிந்தைக்கு ஊக்கம் தந்திருக்கும் என நம்புகிறோம். தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவு செய்வதோடு தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😊
அருமையான பதிவு.....
ReplyDeleteவாழ்த்துகள்!!!