வாசிக்க வேண்டிய காமராசரின் வாழ்க்கை வரலாறு
கர்மவீரர் காமராசர் பிறந்த தினமான ஜீலை 15 ஆம் நாள் ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவது நம்மில் பலர் அறிந்ததே! செய்வதற்கரிய பல செயல்களை தன் தனித்திறனால் செயல்படுத்தி வெற்றிக்கண்ட பெருந்தலைவர் காமராசரது வாழ்க்கை வரலாற்றை அவர் அவதார தினமான இன்று பகிர்வதில் பேரின்பம் அடைகிறேன். இளமை வாழ்க்கை:- விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி என்பவர்க்கும் சிவகாசி அம்மையார்க்கும் 15 ஜுலை 1903 ஆம் ஆண்டு குழந்தையாக அவதரித்தார் காமராசர். அவர் காமாட்சி என பெயர் சூட்டப்பட்டு அன்போடு வளர்க்கப்பட்டு வந்தார். ஆறாம் வகுப்பு பயின்று வந்த போது காமராசரின் தந்தை எதிர்பாரா வண்ணம் இறைவனடி சேர்ந்தார். வறுமையால் வாடிய இளமைப்பருவம்: தந்தையை இழந்த காமராசரின் வாழ்வில் வறுமை வருகை தந்தது. வறுமையின் பிடியிலிருந்து தன் குடும்பத்தை விடுவிக்கவும் தா யிற்கு உறுதுணையாக இருக்கவும் படி ப்பை பாதியிலே விட்டுவிட்டு இளமையிலே வேலைக்கு செல்ல முற்பட்டார். விடுதலை வேட்கை:- தன் மாமாவின் கடையில் வேலை செய்து வந்த காலத்திலே நாட்டின் மீதான பற்றில் பொதுக்கூட்டங்கள் மற்றும் சுதந்தி ர போராட்டங்களிலும் கலந்து கொள்ள ...