இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ்ப் புதுவருடப்பிறப்பு
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவது வழக்கம். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பலரால் வெகுவாக கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு திருநாள் இலங்கை மக்களாலும் பெருமளவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் வருடப்பிறப்பு நாளானது இலங்கையிலும் இந்தியாவிலும் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் இந்தியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் விதத்தை அறிந்து கொள்வோம், வாருங்கள்.
இந்தியாவில் தமிழ் புத்தாண்டு:-
தமிழக மக்களால் மன நெகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று, புதுவருடப்பிறப்பு. சித்திரை மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்தல் மற்றும் முக்கனி வழிபாடு செய்வது, கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்வது ஆகியவற்றை பண்டிகை தினத்தன்று மக்கள் வெகுவாக கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நாளன்று, தட்டு முழுவதையும் முக்கனியான மா, பலா, வாழை ஆகியவற்றால் நிறைத்து, வெற்றிலை, பூ, கண்ணாடி போன்றவற்றை வைத்து பூசைகள் செய்து வழிபடுவது வழக்கம். வாயிலை கண்கவரும் அழகு கோலங்களால் அலங்கரிப்பதும் பாரம்பரிய சிறப்பாகும். மக்கள் புத்தாண்டு தின வாழ்த்துக்களை உற்றோர் மற்றும் உறவினரிடத்தில் பகிர்ந்து உள்ளத்து அன்பினை வெளிப்படுத்தி மகிழ்வர்.
இலங்கையில் தமிழ் புத்தாண்டு:-
இலங்கையில் சித்திரை மாதத்தின் முதல் நாள் சிங்கள புத்தாண்டு என்றும் சிங்கள புது வருஷப்பிறப்பு என்றும் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
கை-விஷேஷம் என்ற பெயரில் முதல் பண பரிவர்த்தனையை மக்கள் இந்நாளன்று செய்கின்றனர். இந்நாளன்று, குழந்தைகளுக்கு பெரியோர் பணமும் ஆசிர்வாதமும் கொடுப்பதும் வழக்கம்.
வருடப்பிறப்பு நாளன்று, விவசாய நிலங்களை உழுது விவசாயம் செய்ய நிலத்தை பக்குவப்படுத்துவர். இலங்கையில் உள்ள சில கிராமங்களில், 'பொற் தேங்காய்' என்ற விளையாட்டு விமரிசையாக விளையாடப்படுவதும் வழக்கம்.
உகடி பண்டிகையன்று தெலுங்கு மக்கள் 'மாங்காய் பச்சடி' செய்து கொண்டாடுவது போல, வருடப்பிறப்பு கொண்டாட்டத்தின் போது சிங்கள மக்கள் 'மாங்காய் பச்சடி' செய்வதும் வழக்கமாகும். புத்தாண்டு தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி அன்பை வெளிப்படுத்தி மகிழ்வர்.
உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை மகிழ்வாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும், இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்!!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ♥️✨
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்😊
ReplyDeleteநான் இந்த பதிவில் இருந்து பலவற்றை அறிந்து கொண்டேன்!!
ReplyDeleteநன்றாக இருந்தது!!
👏👏
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🪔
ReplyDeleteதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🤝🤝
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💓🎉
ReplyDelete☺☺☺
Deleteதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தோழியே.......
Deleteஅருமையான பதிவை வாசித்ததில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது......😇