மன அமைதியின் மார்க்கத்தை விளக்கும் குறுங்கவிதை
உன்னதமான வாழ்வுக்கு வழிகாட்டும் சின்னஞ்சிறு கவிதை👇👇
பழிவாங்கும் குணம் இல்லாமல் அமைதியாக வாழ்வை வாழ்பவரை சிறப்பிக்கும் சிறுகவிதை.
அமைதியின் பாதை
இரவின் மடியிலே,
உறங்க வைத்திடு.
அன்றைய கசப்புகளை,
இருளில் தொலைத்திடு.
மனதின் காயங்களை,
நச்சு படாமல் காத்திடு.
காலைப் பொழுதை,
இனிதே வரவேற்றிடு.
நஞ்சு இல்லாத மனம்,
கதிரவன் போல் ஜொலித்திடும்.
மன காயங்களை ஆறவைத்து,
மகிழ்ச்சியைக் கொடுத்திடும்.
(கவிதையை எழுதியவர் அனிதா)
கவிதைகள் தங்கள் மனங்களை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிலை பயன்படுத்துங்கள். கவிதைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄
என்னை கவர்ந்த கவிதை
ReplyDelete👌👌
அருமையான கவிதை
ReplyDeleteVery nice.
ReplyDeleteVera mariiii💯🔥
ReplyDelete